Total Pageviews

Saturday 17 August 2013

வலி



கீழ்வீட்டு கோமதி , தெருவில் விற்றுக்கொண்டு போகும் திண்பண்டங்கள், மலிவு விலை அழகு சாதனங்கள், ஹேர் கிளிப்புகள் முதல் பூ வரை எல்லாவற்றுக்கும் மனதார செலவழிப்பாள். புத்தகங்கள் மட்டும் ஓசியில்தான்.
எனக்கோ புத்தகங்களை இரவல்  தரவே பிடிக்காது.!புத்தகங்கள் எனக்கு பொன் போல கண் போல! வாசுகி என்ற என் பெயரை வாசகி என்று மாற்றிக்கொள்ளும் எண்ணம் மனதுக்குள் வந்து வந்து போகும்.

பெற்ற மகளைக் கட்டி கொடுத்து புக்ககம் அனுப்பி வைக்கும் தாயின் மன நிலை புத்தகங்களை இரவல் தரும் வேளையில் எனக்கு ஏற்படும், 

பார்த்து பத்திரம் என்று பக்கத்துக்கு  ஒரு முறை சொல்லித்தான் கொடுப்பேன்.
அப்படியிருந்தும் ஓரங்கள் மடங்கி பக்கங்கள் கிழிந்து நீரில் நனைந்து பெருமழையில் மாட்டி கொண்ட வெள்ளைப்புறா போல இருந்தது புத்தகம்.

சர சரவென கீழே இறங்கினேன் . புத்தகத்தை எடுத்துகொண்டு, “ கோமதி என்ன இது… புத்தகத்தை பார்த்தாயா என்ன நாசம் பண்ணியிருக்கே… பத்திரிக்கை தர்மம்னு ஒண்ணு இருக்கு ஆனா தர்ம பத்திரிக்கைன்னு ஒண்ணு கூட இல்ல தெரியுமா?” என்றேன் ஆத்திரம் பொங்க…
“அக்கா கொளந்தைங்கை இருக்கிற வீடு அப்படித்தான் இருக்கும்… என்றாள் ஈஸியாக…!
விக்கித்து போய் நின்றேன். இன்னும் பிள்ளை வலி என்றால் என்ன என்று தெரியாத நான்!

(26-06-2013 குமுதம் இதழில் வெளிவந்தது)
 

5 comments:

  1. //பெற்ற மகளைக் கட்டி கொடுத்து புக்ககம் அனுப்பி வைக்கும் தாயின் மன நிலை புத்தகங்களை இரவல் தரும் வேளையில் எனக்கு ஏற்படும், //

    மிகச்சிறப்பான உதாரணம்.


    >>>>>

    ReplyDelete
  2. //“அக்கா கொளந்தைங்கை இருக்கிற வீடு அப்படித்தான் இருக்கும்… என்றாள் ஈஸியாக…!

    விக்கித்து போய் நின்றேன். இன்னும் பிள்ளை வலி என்றால் என்ன என்று தெரியாத நான்!//

    முடிவு ................. வெரி டச்சிங்

    >>>>>

    ReplyDelete
  3. (26-06-2013 குமுதம் இதழில் வெளிவந்தது)

    சந்தோஷம். மனமார்ந்த இனிய வாழ்த்துகள்.

    -=-=-=-

    விக்கித்து நின்ற இந்தக்கதையில் வரும் நாயகியின் ஏக்கத்தை நான் ஒரு சிறுகதையில் எழுதியிருந்தேன்.

    அது 22.12.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் பிரசுரமானது.

    படிக்க இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/01/1-of-2_13.html

    http://gopu1949.blogspot.in/2011/01/2-of-2.html

    ReplyDelete
  4. வலி..... ."அக்கா கொளந்தைங்கை இருக்கிற வீடு அப்படித்தான் இருக்கும்… என்றாள் ஈஸியாக…! விக்கித்து போய் நின்றேன்." நானும்தான். எனக்கு ஏதோ இனம் புரியாத வலி, தொண்டைகுழியில் எதோ அடைத்தது போன்று ......கண்களில் கண்ணீர் அரும்பியது. ..என் நிலையைக் கண்ட என் துணவி........"என்னங்க... எதையாவது படிக்கவேண்டியது...ஒண்ணு அழுகிகிறீர்கள் இல்லட்டா பல்லை கடிக்கிறீர்கள்....? இப்படி யாராவது மனுஷங்க இருப்பார்களா ? எனக் கடிந்து கொண்டபின்பே நான் அந்த மாடிப்படியிலிருந்து மீண்டேன்.

    ReplyDelete